2008ஆம் ஆண்டு காலச்சுவடு 100ஆம் இதழ் வெளிவந்த நிலையில் திமுக அரசாங்கம், அரசு நூலகங்களில் அதைத் தடைசெய்தது. தடையை எதிர்த்து இந்திய அளவில் பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்தார்கள். உயர் நீதிமன்றம் 2010இல் இதழை மீண்டும் நூலகத் துறை வாங்கிட உத்தரவு பிறப்பித்தது.இந்தப் பின்னணியில் தமிழக அரசியல் சார்ந்த காலச்சுவடின் பார்வை என்ன? இதழ் தடைசெய்யப்படுவதற்கான காரணிகள் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையை வாசகர் உருவாக்கிக்கொள்ள விரிவான சான்றுகளை இத்தொகுப்பு முன்வைக்கிறது. 2001 2011 வரை காலச்சுவடில் வெளிவந்த முக்கியமான அரசியல் பதிவுகள் இதில் உள்ளன. மேலும் விரிவான ஆய்வுக்காக காலச்சுவடில் வெளிவந்த அனைத்து அரசியல் பதிவுகளின் முழுமையான பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.அதிகாரத்திடம் உண்மையை பேசிய குரல்கள் இவை. விற்பனையில் தமிழக இதழியலின் வெளிவட்டத்தில் இருக்கும் ஒரு இதழ், கருத்துருவாக்கத்தில் அதன் மையத்தில் செயல்பட்ட வரலாறு இது.
தமிழக அரசியல்: காலச்சுவடு கட்டுரைகள் (2001-2011)
Brand :
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9789381969052
- Pages: 520
- Format: Paperback
SKU: 9789381969052
Category: கட்டுரைகள்
Editor: கண்ணன்
Be the first to review “தமிழக அரசியல்: காலச்சுவடு கட்டுரைகள் (2001-2011)” Cancel reply
Reviews
There are no reviews yet.