தற்போதைய நிலையில் இருப்பதை விட உயர்ந்த நிலைக்குப் போகவே மக்கள் விரும்புகிறார்கள். அந்த உயர்ந்த நிலையை அடைய, கிடைக்கிற வருமானம் போதுமானதாக இல்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, ஒன்று, வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அல்லது செலவைக் குறைத்து, பணத்தைச் சேமித்து, முதலீடு செய்து, பெருக்கி, அந்த உயர்ந்த நிலையை அடைய வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதற்கு, தான் மட்டும் முயற்சித்தால் போதாது. சூழ்நிலையும் ஒத்துவரவேண்டும்.அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள இருக்கும் ஒரே வழி, சேமிப்பு மட்டுமே. சேமிப்பின் அவசியம் தெரியாதது அல்ல. ஆனால், அனைவரும் செய்வதில்லை. காரணம் பலருக்கும் எப்படி எல்லாம் சேமிக்க முடியும் என்கிற வழிகள் தெரியவில்லை. அதை மிக எளிய உதாரணங்களுடன், தேவையான இடங்களில் கதைகள், உண்மை நிகழ்வுகள் மூலம் மிக அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறார், சோம வள்ளியப்பன். அள்ள அள்ள பணம் 1 முதல் 9 வரை மற்றும் பணம் : சில ரகசியங்கள், பணமே ஓடிவா போன்ற வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட புத்தகங்களின் ஆசிரியர் சோம வள்ளியப்பன் எழுதிய சேமிப்பு குறித்த மிக முக்கியமான புத்தகம் ‘சிறுதுளி பெரும் பணம்’.
சிறுதுளி பெரும் பணம்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:சோம வள்ளியப்பன்
Be the first to review “சிறுதுளி பெரும் பணம்” Cancel reply
Reviews
There are no reviews yet.