உலகம் தோன்றிய காலத்திலிருந்தே அடிமனத்தின் ஆழத்திலிருந்து மனிதர்களை ஆட்டிப் படைக்கும் ஒரு சொல், பணம். அந்தப் பணத்தைச் சேர்ப்பதற்குத்தான் சாமானியன் முதல் பில்கேட்ஸ்வரை அனைவரும் உழைக்கின்றனர்.செல்வத்தின் இலக்கணங்களையும் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து, செல்வத்தைக் குவிக்கும் வழிகளை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார் ஜி.எஸ்.சிவகுமார்.ஒவ்வொரு வழியைச் சொல்லும்போதும் தான் நேரடியாகக் கண்டும் கேட்டும் பெற்ற அனுபவங்களை இணைத்து விளக்கியிருக்கிறார்.• செல்வம் என்றால் என்ன? அதை எப்படிக் கண்டடைவது?• செல்வத்தை நோக்கி நகர்வது எப்படி?• நேர்மையாக, நேர்வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா?• பணக்காரன் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா?• பணத்தை முதலீடு செய்வது எப்படி?இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.‘ஏழையாகப் பிறந்தது உன் தவறல்ல. ஏழையாக மடிவதுதான் உன் தவறு’ என்ற கருத்தை வலியுறுத்தும் இந்தப் புத்தகம், செல்வந்தராக மாற நினைக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கையேடு.
செல்வம் சேர்க்கும் வழிகள் (சுவாசம் புக்)
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:G. S. சிவகுமார்
Be the first to review “செல்வம் சேர்க்கும் வழிகள் (சுவாசம் புக்)” Cancel reply
Reviews
There are no reviews yet.