- வாசகசாலை விருது – 2019
- பாலகுமாரன் நினைவு விருது – 2019
அண்டத்தின் கடையேழுகோடி ஆண்டும் அதற்கு அப்பாலும், அதற்கு முன்னும் உலகம் தோன்ற முழுமுதலான தேவை
எதிர்பாலினத்தின் உடல் மீதேர்ப்படும்
மிகை ஈர்ப்பு
விரசம்
விரகம்
ஏக்கம்
ஆர்வம்
காமம்
மோகம்
யென வயதோ நிறமோ அதை கடந்த பால்சார்ந்த ஈடுபாடோ.. ஏதோவொன்று அந்த ஒன்றை தேடியலைந்து திரிவதே இந்த ஜென்ம சாபல்யம்.
சரி தவறு என்கிற நிலைக்கு அப்பால் மூர்க்கத்தனமான சரீரத்தேவை. அதனோடான காதல் என்கிற நிலைகடந்து காடு மேடு மலை பாறை கடலென நீந்தி நீர்வீழ்ச்சியாய் விழுந்தோடிய ஓர் இயற்கைத் தேடல்..
இந்நாகரிகக்காலக்கட்ட மானுடத்தின் திருத்தப்பட்ட சமுதாயக் கோட்பாடுகளின் மாற்றங்களை கையாள்வதுமாய் அவற்றினூடான நிகழ்ச்சிக் குறிப்பீடுகளான சிற்சில சம்பவங்களின் கூட்டுத்தொகையாய் சிறப்பாய் அமைந்திருக்கிறது ‘சரீரம்’ சிறுகதை தொகுப்பு..
பல இடங்களில் இருதயத்தை கசக்கக் கூடியதாகவும் அதனூடே பயணிக்கும் ஆர்வத்தையும் மேலோங்கியும் சீக்கிரம் முடிந்த இன்னும் நீளாதா என்கிற ஆர்வம் எழச்செய்யவல்ல நூலாகிறது ‘சரீரம்’
கதை மாந்தர்கள்
சூழல்
விவரணை
காலக்கட்டம்
கையாளும் மொழி
சொற்பிரயோகம்
யென அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பெற்ற வடிவம் இச்’சரீரம்’ சிறுகதை தொகுப்பு..
~ பவித்ரா பாண்டியராஜூ
Reviews
There are no reviews yet.