மேற்கு வங்கத்தில் 1960களில் துவங்கி 70 வரை மார்க்சிஸ்ட் கட்சி சந்தித்த கொடிய அடக்குமுறைகள், அரச பயங்கரவாதம், ஆளும் வர்க்கத்தின் மூர்க்கமான தாக்குதல்கள், இவற்றைக் கட்சியும் கட்சி ஊழியர்களும் சந்தித்த வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட உணர்ச்சிகரமான நாவல்.
நாவல் விறுவிறுப்பாக ஒரு துப்பறியும் நாவல் போலப் பயணிக்கிறது. குடும்பப்பாசங்களும் பயங்களும் காதல் கதைகளின் குறுக்கீடுகளும் நிறைந்த முழுமையான நாவல். ஓரிடத்தில் கூட பிரச்சாரமாகவோ துருத்தலாகவோ கலை நயம் குறைந்து போயோ ஏதும் இல்லாமல், இடதுசாரி அரசியலே தெரியாத ஒருவர் படித்தாலும்கூட அவரையும் ஈர்க்கும்படியாக நாவல் எழுதப்பட்டிருக்கிறது. கதை சொல்லல் முறையே மிகுந்த சுவையாகவும் பொருத்தமாகவும் அமைந்து நம்மை அப்படியே உள்ளே இழுத்துச்செல்கிறது. லட்சக்கணக்கான எளிய மக்கள் செங்கொடிகளோடு பங்கேற்கும் தமால் ராய்க்கான வீரவணக்க ஊர்வலத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது. ரவிச்சந்திரன் அரவிந்தன், மொழிபெயர்ப்பு என்கிற வாசனையே இல்லாத அளவுக்கு அசல் தமிழ் நாவலைப்போலவே மொழிபெயர்த்துள்ளார்.
Reviews
There are no reviews yet.