எஸ். வி. ராஜதுரை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவர் சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் மனித உரிமை இயக்கத்தில் களப்பணி பணியாளராக செயலாற்றிய ராஜதுரை அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க பணியை செய்தவர்.
இவரது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்கம் ஓர் ஆய்வு நூலாக வெளிவந்திருக்கிறது. இவர் வ. கீதா உடன் இணைந்து மார்கிசிய, பெரியாரியத்துக்கான முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
நன்றி: விக்கிப்பீடியா
Reviews
There are no reviews yet.