இந்தியப் பிரிவினைக்குச் சற்று முன்னர் தொடங்கி, இன்றுவரை எங்கெல்லாம் ஹிந்துக்களுக்குப் பிரச்னை வருகிறதோ, அங்கெல்லாம் களத்தில் நிற்பது ஆர்.எஸ்.எஸ். தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது.அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை?சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய கலவர காண்டத்தை பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்மூலம் தொடங்கிவைத்தது ஆர்.எஸ்.எஸ். மும்பை தொடங்கி கோத்ரா வரை நீண்ட அவலங்களின் சரித்திரம் அழியக்கூடியதல்ல. இயற்கைப் பேரழிவுச் சம்பவங்களானாலும் சரி. பங்களாதேஷ் யுத்தம், கார்கில் யுத்தம் போன்ற தருணங்களானாலும் சரி. நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் முதலில் களத்தில் நின்றிருக்கிறார்கள்.எனில், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இரண்டு முகமா? இல்லை. இருபது முகங்கள் என்று எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.அயோத்தி விவகாரம் தொடர்பான அலகாபாத் தீர்ப்பு வெளியாகி, அது ஹிந்துத்துவவாதிகளுக்குச் சாதகமாகவும் இருக்கும் சூழலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இருப்பையும் செயல்பாடுகளையும் நடுநிலைமை-யுடன் ஆராயும் இந்நூல், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது.
ஆர்.எஸ்.எஸ்
Brand :
- Edition: 01
- Published On: 2010
- ISBN: 9788184935776
- Pages: 283
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788184935776
Category: கட்டுரைகள்
Author:பா. ராகவன்
Be the first to review “ஆர்.எஸ்.எஸ்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.