புதுக்கோட்டையைப் புரிந்துகொள்வதொன்றும் கடினமல்ல, அத்தனை எளிதுமல்ல. நடக்கையில், ஓடுகையில் ஓர் ஓடோ, ஒரு கல்லோ காலைத் தடுக்கினால் அவை மூத்தகுடிகள் விட்டுச் சென்ற சுவடுகளாக இருக்கக்கூடும். அந்தளவிற்குத் தொல்குடிச் சான்றுகள் நிரம்பப் பெற்ற ஊர். சோழ, பாண்டியப் பேரரசுகள் தம் எல்லைகளை வகுத்துக் கொண்டது இங்கேதான். ஐந்திணை நிலங்கள், அந்நிலங்களுக்குரிய பண்பும் குணாம்சங்களும் கொண்ட மக்கள். ஆதிகுடிகள், ஆண்ட குடிகள், அதிகாரக் குடிகள், ஆதிக்கக் குடீகள், ஆதிக்கத்தை மீறும் குடிகள் என்று பலதரப்பட்ட சமூக மக்களைக் கொண்ட பிரதேசம். தமிழக நிலப்பரப்பிலிருந்த ஒரே தனியரசு மட்டுமல்ல புதுக்கோட்டை. தமிழ் ஆட்சி மொழியான முதல் தமிழரசும் கூட. புதிய நகரம் எனும் பொருளில் உலகில் சில நகரங்களே உள்ளன. அவற்றிலொன்று புதுக்கோட்டை. இவ்வூரிலுள்ள கோட்டைகளும் கொத்தளங்களும் பழைமை ஆகலாம். ஊரும் பெயரும் ஆகாது.
புதுக்கோட்டை (முதல் தொகுதி)
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9788197968853
- Pages: –
- Format: Paperback
SKU: 9788197968853
Category: கட்டுரைகள்
Author:அண்டனூர் சுரா
Be the first to review “புதுக்கோட்டை (முதல் தொகுதி)” Cancel reply
Reviews
There are no reviews yet.