ஈராயிரமாண்டுகளாய் கைமாறிக் கொண்டேயிருக்கிற பிடிமண்தான் தமிழ்க் கவிதைகள். இளங்கரங்களின் புதுரேகைகள் படிந்து, செழுங்கோலம் கொள்ளும் கவிதைகளில் பல்லாயிரம் பருவங்களாய் உயிர்த்திருக்கிறது மொழி. முத்துராசாவின் கவிதைகள், மண்ணிழப்பின் கோபக்குலவை… சடங்குப் பொம்மைகளோடு கனவில் விளையாடும் தோல்வியுற்ற வேளாண்குடிக் குழந்தைமை… ஆண்டைக்கான வசவுப்பாடலுக்கு பறைகொட்டி விசிலடிக்கும் திமிறல்… சொற்களை பனங்கருக்கால் கூர்தீட்டும் முயற்சி. வாழ்வுதான் இன்று உக்கிரமான அரசியல். கலையின் உலையில் அதையே சூடேற்றிப் பரிசோதிக்கிறான் இந்த இளங்கவிஞன்.
Be the first to review “பிடிமண்” Cancel reply
Reviews
There are no reviews yet.