இரு மொழி எழுத்தாளர் டாக்டர் ஆர். நடராஜன் கல்லூரி முதல்வராக, ஆங்கிலப் பேராசிரியராக இந்து நாளிதழின் உதவி ஆசிரியராக, அமெரிக்கத் தூதரக அரசியல் அலோசகராகப் பணியாற்றியவர். நிர்வாகவியல் மற்றும் பொருளியல் நூல்களுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகளைப் பெற்றவர். ஆங்கிலத்தலும் தமிழிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் சில நூல்களையும் பல கட்டுரைகளையும் மொழிபெயர்த்துள்ளார். சிறந்த மொழிபெயர்ப்பாளர், சிறந்த ஆங்கில நூலாசிரியர், சிறந்த தமிழ் நூலாசிரியர், சிறந்த ஆங்கிலப் பத்திரிகையாளர், சிறந்த தமிழ்ப் பத்திரிகையாளர் என்ற விருதுகைளைப் பெற்றுள்ள இவர் சாகித்ய அகடமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். தமிழ் நாட்டின் தலைசிறந்த அரசியல் விமர்சகர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரிய இவர் எதையும் தெளிவாக, துணிவாக எழுதுபவர். வாசகர்களுக்கு மட்டுமே கடமைப்பட்டவன் என்ற கொள்கையுடன் இவர் எழுதியுள்ள அரசியல், சமுதாய, பொருளாதாரக் கட்டுரைகள் சமகால வரலாற்று ஆவணங்கள். அப்படிப்பட்ட 51 கட்டுரைகளின் தொகுப்பே நாடு படும் பாடு என்ற இந்த நூல்.
நாடு படும் பாடு
Brand :
- Edition: 01
- Published On: 2015
- ISBN: 9789383067398
- Pages: 224
- Format: Paperback
SKU: 9789383067398
Category: கட்டுரைகள்
Author:ஆர். நடராஜன்
Be the first to review “நாடு படும் பாடு” Cancel reply
Reviews
There are no reviews yet.