மார்க்கெட்டிங் என்பது கற்றுக்கொடுக்க முடியாத கலை என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ ராக்கெட் அறிவியலே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குக் கடினமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து இவற்றை எல்லாம் கற்றுக் கொண்டால்தான் மார்க்கெட்டிங்கில் ஜெயிக்கமுடியும் என்று பயமுறுத்துகிறார்கள்.சதீஷ் கிருஷ்ணமூர்த்தி இந்த இரு தரப்புகளையும் ஒதுக்கிவிட்டு மார்க்கெட்டிங் உலகின் ‘அ’ முதல் ‘ஃ’ வரை அனைத்தையும் ஜாலியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார். வெறுமனே பொருளை விற்றுக் கொண்டிருக்காதீர்கள். ஒரு பிராண்டாக மாறுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார்.கஸ்டமர் எனும் குலதெய்வத்தின் அருளை எவ்வாறு பெறுவது? போட்டியாளரை எப்படி முறியடிப்பது? தகவல் தொடர்பை வெற்றிகரமாகப் பயன்படுத்துவது எப்படி? ஊழியர்களின் பங்களிப்பை முழுமையாகப் பெறுவது எப்படி? நிறுவனத்தின் திறனை அதிகரிப்பது எப்படி? நிறுத்தி, நிதானமாக எல்லாவற்றையும் இந்நூல் விளக்குகிறது.ரசிக்க வைக்கும் எடுத்துக்காட்டுகள், சாதித்தவர்கள் மற்றும் சோதித்தவர்களின் கதைகள், மிக மிக இயல்பான வழிமுறைகள் என்று உங்களைச் சுண்டி இழுக்கும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் மார்க்கெட்டிங் ஆலோசகரும் பயிற்சியாளருமான சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் மந்திரங்களை உள்ளடக்கிய நூல்.
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
Be the first to review “மார்க்கெட்டிங் மந்திரங்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.