ஒரு மொழியின் உச்சமாகவும் கலைகளின் உச்சமாகவும் திகழ்வது கவிதை. சொல்ல நினைப்பதை சுருக்கமாகவும் நயம்படவும் சொல்ல வேண்டுமானால், அதற்கு கவிதையே சிறந்த வடிவம். தேவையற்றதை நீக்கிய பிறகு ஒரு சிலை பிறக்கிறது. அப்படித்தான் தேவையற்ற சொற்களைத் தவிர்த்து உருவாவது கவிதை. ஒரு கவிஞன் தான் உணர்ந்ததை, தன்னை பாதித்த சம்பவங்களை கவிதையாக்கித் தருகிறான். அந்தக் கவிதை வாசகனுக்கும் அதே உணர்வைத் தந்தால் அது சிறந்த கவிதையாகிறது. அப்படிப்பட்ட கவிதைகளை மிகை உணர்ச்சியற்ற, மிகை கற்பனை கலவாத யதார்த்த எழுத்தில் தந்திருக்கிறார் சீனு ராமசாமி. இந்தக் கவிதைகளின் மூலம் தன் உள்ளக் குமுறல்களையும் இந்த சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையையும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். தன் சொந்த ஊர் பற்றி எழுதியுள்ள ஒரு கவிதையில் கடைசி வரியை ‘இது என் ஊரே இல்லை’ என்று ஒருவித கோபத்தோடு முடித்திருப்பது, கிராமங்களிலும் இந்த அமைதியின்மை சூழ்ந்துவிட்டதை உணர்ந்ததால் அவருக்குள் எழுந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி யிருக்கிறது. இயக்குநராக இயல்பான மனிதர்களைத் தன் திரைப்படங்களில் காட்டும் சீனு ராமசாமி, அவ்வாறே தன் கவிதைகளையும் படைத்திருக்கிறார்.
கோயில் யானையின் சிறுவன்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9789394265318
- Pages: –
- Format: Paper Cover
SKU: 9789394265318
Category: கவிதைகள்
Author:சீனு ராமாசாமி
Be the first to review “கோயில் யானையின் சிறுவன்” Cancel reply
Reviews
There are no reviews yet.