சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல முக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். ‘கனவு’ என்ற சிற்றிதழை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கோமணாண்டி முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் சிலரின் அனுபவங்களை சமகால நிகழ்ச்சிக் குறிப்புகளுடன் இந்நாவல் விவரிக்கிறது. கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், தொன்மக்கதைகள், பக்தி சார்ந்த சடங்குகள் மற்றும் இவற்றுக்கு முரணான நாத்திகம் உட்பட பல அம்சங்கள் இந்நாவலில் விரவிக்கிடக்கின்றன. வாழ்க்கைக் குழப்பத்தின் புகைப் படலங்களிடையே அகப்பட்டு உழலும் நவீன சிக்கல்கள் கொண்ட மனிதர்களை சுப்ரபாரதிமணியன் இந்நாவலில் அழுத்தமாய் அறிமுகப்படுத்தி முக்கிய நாவலாக்கியிருக்கிறார்.‘சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாகவும் உலகமயத்துக்கு எதிரான குரலாகவும் அமைந்துவருகின்றன.’- ஆர். நல்லகண்ணு
கோமணம்
Brand :
- Edition: 01
- Published On: 2017
- ISBN: 9789386737366
- Pages: 104
- Format: Paperback
SKU: 9789386737366
Category: புதினம்
Author:சுப்ரபாரதிமணியன்
Be the first to review “கோமணம்” Cancel reply
Reviews
There are no reviews yet.