கலையுலகில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய நூல் ஜான் பெர்ஜரின் ‘கலை காணும் வழிகள்’. பிபிசி தொலைக்காட்சித் தொடரொன்றை அடியொற்றி எழுதப்பட்ட இந்த நூல் 1972இல் வெளியானது.
ஜான் பெர்ஜர் பண்டைய ஓவியங்களின் மீதிருக்கும் மாயப்போர்வையை விலக்கி அவற்றைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறார். படைப்புகளை அவற்றின் புதிர்ச் சிறையிலிருந்து விடுவிக்கிறார்.
பார்வையாளர்களுக்கும் படைப்புகளுக்குமான இடைவெளியைக் கணிசமாகக் குறைக்கிறார். ஓவியங்களைப் பார்க்கும் முறை மாறுகிறது. ஓவியங்கள் நமக்கு நெருக்கமாகின்றன.
நுட்பமான விவரணைகளும் ஆழமான அழகியல் பார்வைகளும் கொண்ட இந்த நூலைத் தமிழ் வாசகர்களுக்கு அணுக்கமான முறையில் மிக எளிமையாகத் தமிழாக்கியிருக்கிறார் பி.ஏ. கிருஷ்ணன்.
Reviews
There are no reviews yet.