ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் (Alice in Wonderland, அற்புத உலகில் ஆலிஸ்) 1865 இல் லூயிஸ் கரோலினால் எழுதப்பட்ட ஒரு புதினம். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு அற்புத உலகத்தைக் காணும் ஆல்ஸ் என்ற சிறுமியின் கதையை இப்பதினம் சொல்கிறது. ”அற்புத உலகில் ஆலிசின் சாகசங்கள்” (Alice’s Adventures in Wonderland) என்ற முழுப்பெயர் கொண்ட இது, வெளியாகி சுமார் 150 ஆண்டுகள் ஆன பின்னரும் பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து அகவையினரின் குறையா வரவேற்பைப் பெற்றுள்ளது. இலக்கியப் பிதற்றல் பாணியின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. விந்தையான மாந்தவுருவக விலங்குகள் நிறைந்த ஆலிசின் அற்புத உலகம், புதினத்தின் கதை வடிவம், கதை கூறும் தன்மை ஆகியவை கனவுருப்புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தான் பணிபுரிந்த கல்லூரி முதல்வரின் இளைய மகளுக்கு 1862 சூலை 4-இல் இவர் சொல்லத்துவங்கிய கதையே ஆலிசின் விந்தை உலகமாக விரிவு கொண்டது. ஆலிஸ் என்ற பெண் தோட்டத்தில் கடிகாரத்தைப் பார்த்து கொண்டே ஓடுகின்ற ஒரு முயலைக் காண்கிறாள். அது நுழைந்து ஓடிய ஒரு மரத்தடி பொந்தைத் தேடிப் பார்க்கையில் அவளறியாமல் உள்ளே விழுந்து விட்டாள். அவள் நேராக எங்கே விழுந்தாள் என்ன செய்தாள் என்பதே மீதி கதை. [1]. இதில் ஊடும் மெல்லிய நகைச்சுவையும், வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாட்டை அறியத்துடிக்கும் கேள்விகளை பூடகமாக வெளிப்படுத்துவதாலும், இது ஒரு செவ்விலக்கியமாகக் கருதப்பட்டு, அனைத்து வயதினராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது.
நன்றி: விக்கிப்பீடியா
Reviews
There are no reviews yet.