நவீனத் தமிழ் இலக்கிய மரபின் ஒரு கூறாகத் தொன்மங்கள் மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டபோது, இந்தியக் கதை மரபின் முதன்மையான தொன்மங்களில் ஒன்றாக அகலிகைத் தொன்மம் அடையாளப்படுத்தப்பட்டது. பெண்ணியப் பார்வைகள் மேலோங்கிய காலத்தில், படைப்பாளரின் படைப்புத்திறன், சமூகவியல் பார்வைகளின் அடிப்படையில் உருவான கதைகள், கவிதைகள், நாடகங்கள் ஆகியன பல்வேறு பார்வைக் கோணங்களை முன் வைக்கின்றன. நவீனத் தன்மையை உள்வாங்கி, புதுமைப்பித்தன் எழுதிய ‘சாப விமோசனம்’ கதைக்கும், அவ்வாறு தொன்மங்களைத் திரிக்கக் கூடாது என்று சொல்ல விரும்பும் ராஜாஜியின் ‘அகலிகை கதை’க்கும் இடையே எவ்வளவு சமூக முரண்பாடுகள் உள்ளன என்பதை இத்தொகுப்பு உணர்த்துகிறது. எதிரும் புதிருமான படைப்பியக்கக் கருத்தாடல்கள் ஒருங்கிணையும்போது, வாசிப்பைச் சுவையாக்குவதுடன் அதன் பின்னால் உள்ள அரசியலையும் விடுவிக்கிறது. இதுவரை தொகுக்கப்படாமல் இதழ்களில் மட்டுமே வெளியான படைப்புகளையும் அரிதின் முயன்று இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அகலிகை (கதைகள் | கவிதைகள் | நாடகங்கள்)
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Categories: கவிதைகள், சிறுகதைகள், நாடகம்
Author:மு. சீமானம்பலம்
Be the first to review “அகலிகை (கதைகள் | கவிதைகள் | நாடகங்கள்)” Cancel reply
Reviews
There are no reviews yet.