1946 The last war of independence என்று கப்பற்படை எழுச்சி பற்றி பிரமோத் கபூர் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்தில் ஆய்வு செய்து, எழுச்சியோடு தொடர்புடைய அனைவர் குறித்தும் தகவல்களைத் திரட்டி எழுதியுள்ளார். எழுச்சியின் தலைவர்களின் வாரிசுகளை உலகம் முழுக்கத் தேடி, அவர்களிடமிருந்து தகவல்கள் பெற்றுள்ளார். புத்தகம் முழுக்க அக்காலத்தின் அரிய பத்திரிகைகளின் படங்கள், பத்திரிகைகளில் வந்த படங்கள் இடம் பெற்றுள்ளன. சின்னச் சின்னதாய் நிறைய புதிய தகவல்கள் புத்தகம் முழுவதும் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு திரில்லர் போன்ற புத்தகம்.
இப்புத்தகம் 1946 இறுதிச் சுதந்திரப் போர் என்ற தலைப்பில் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.உண்மையான வரலாற்றை அறியும் ஆர்வம் உள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
-ச. சுப்பாராவ்
Reviews
There are no reviews yet.