திரைப்படக் கலையின் மூலமாக வாழ்க்கை குறித்த எனது சிந்தனைகளைத் தொகுத்துக்கொள்ள முயன்றதன் விளைவே இக்கட்டுரைகள். மொழியால் நேரடியாகச் சிந்திப்பது ஒரு வகை. ஒரு நூலை வாசித்ததும் உங்களுக்கு அது பற்றிச் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அவற்றைக் கற்பனா சக்தியின் துணையுடன் விரித்தெடுத்து நீங்கள் சிந்திக்கிறீர்கள். அப்படிச் சிந்திக்கும்போது உங்கள் மனக்கண்ணில் அவை காட்சிகளாக உருமாறுவது இன்னொரு வகை. நமது எண்ணங்கள் தேர்ந்தெடுக்கும் வடிவம் (form) பெரும்பாலும் காட்சிப்பூர்வமானது. அதனால்தான் இலக்கியத்தின் முக்கிய அம்சம் வாழ்வைக் “காட்ட” வேண்டும் என்பதாக உள்ளது. ஓர் இலக்கியப் பிரதியில் மொழி, சிந்தனை, காட்சி என்கிற ஒழுங்கில் நிகழும் செயல்முறையானது (process), திரைப்படத்தில் காட்சி, சிந்தனை, மொழி எனத் தலைகீழாக (reverse process) மாறுதலடைகிறது. இக்கருத்தாக்கத்தை நிறுவும் விதமாகக் காட்சிகள் வழியாகச் சிந்திக்கத் தலைப்படுவதே இக்கட்டுரைகளின் மைய நோக்கம்.
மாயா வேட்டம்
Brand :
- Edition: 1
- Published On: 2022
- Format: Paper Cover
Category: கட்டுரைகள்
subjects: CINEMA, LIFE
Author:கோகுல் பிரசாத்
Be the first to review “மாயா வேட்டம்” Cancel reply
Reviews
There are no reviews yet.